Success!

A big success faces a half a dozen failures...

Saturday, January 5, 2013

பின்னோக்கிப் போவோமா?

மாறி வரும் உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இன்மை, காற்று நிலம் மாசு படுதல், போதிய நிலம் இல்லாமை, செல்பேசியின் அதிகப் பயன்பாடு இவை எல்லாம் நம் சுகாதாரத்திற்கு எதிரிகள். மூன்று தலைமுறைக்கு முன்னால் மூன்று வேளை உணவு இல்லை. பொரித்த உணவு ஏறத்தாழ அறவே இல்லை என்றுதான் கூற வேண்டும். தேங்காயைச் சமைத்துச் சாப்பிட மாட்டர்கள். குழம்பில் தேங்காய் விழுதை ஊற்றுவதாக இருந்தாலும் அடுப்பை அணைத்து விட்டுப் பின் ஊற்றிக் கருவேப்பிலை சேர்த்து இறக்கி விடுவார்கள். கீரை அதிகம் சமைத்துச் சாப்பிட்டார்கள். உருளைக் கிழங்கைக் குறைவாகச் சாப்பிட்டார்கள். சாப்பிட்ட உணவு செரித்து விடும் வாழ்க்கை முறை. நிறைய நடந்தார்கள். தேவையான தூக்கம் தூங்கினார்கள். பிராய்லர் கோழி இல்லை. ஆனால் இவ்வாறெல்லாம் இப்போது வாழ முடியும? ஒரு கட்டத்தில் வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்றாகி விடுகிறதல்லவா? அதாவது மருத்துவர் டையட் எக்ஸர்ஸைஸ், வாக்கிங் என்று கூறும்போது கண்டிப்பாகச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம். அதை ஏன் நம் பழக்கமாகவே ஆக்கிக் கொள்ளக் கூடாது? எல்லோரும் பழைய வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும். மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்!

1 comment:

  1. மாறுவதற்குப் பெரும் தடைக்கல்லாக இருப்பது நம்முடைய சோம்பேறித்தனம் தான், ஆனால், அதை மாற்றுவதே ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்மாக இருக்கிறது.. :-(

    ReplyDelete