Success!

A big success faces a half a dozen failures...

Monday, January 7, 2013

இயற்கை விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரின் “எந்நாடுடைய இயற்கையே போற்றி”

இயற்கை ஆர்வலர்களில் இந்த இயற்கை விஞ்ஞானிக்கு ஒரு முக்கிய இடமுண்டு. ”எந்நாடுடைய இயற்கையே போற்றி” என்ற இவர் நூலில் நாம் இயற்கை விவசாயம் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய கருத்துகளை எல்லோருக்கும் புரியும் வண்ணம் சுவையோடு எளிதாக எடுத்துரைக்கிறார். பசுமைப் புரட்சி என்ற பெயரில் பயிர்களுக்கு யூரியாவையும் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து போன்ற அவசியமில்லாதவைகளையும் சேர்ப்பது பூச்சிகளோடு மற்ற உயிரினங்களையும் அழிக்கும் என்பதையும் தெளிவாக எடுத்துரைக்கிறார். இவையே நம் உடல் உறுப்புகளில் நோய்களைப் பெருக்கிச் சுற்றுச் சூழலையும் மாசு படுத்துகிறது. தெரியாமல் செய்யும் தவறை விடத் தெரிந்தே அனுமதிக்கும் தவறுகள் மனித வாழ்க்கைகும் இயற்கைகும் மாபெரும் சேதத்தை உண்டு பண்ணுகிறது. கால் நடைகள், தாவரங்கள், மண்ணில் வாழும் பல்லுயிர்கள் இவை யாவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. ஆதிகாலம் தொட்டே நாம் நன்கு அறிந்த விவசாயத்தை ஆராய்ச்சி என்ற பெயரில் ஏறத்தாழ அழித்து விட்டோம். இந்நூல் விவசாயிகளுக்கான நூல் அல்ல. எல்லோரும் படித்துப் பின் பற்ற வேண்டிய பயனுள்ள் விழிப்புணர்வு நூல்!

No comments:

Post a Comment